இயற்கை என்னும் இறைவன் கண்டேன் அன்பில் உயிரைக் கண்டேன் உன்னைஉணர்ந்தேன் என்னை மறந்தேன் உன்னில் என்னைக் கண்டேன் – (இயற்கை)பொருள் தேட முயலவில்லை செல்வம் சேர்க்க ஆசையில்லை அருள் தேடி உன் பாதம்பற்ற மேகம் தெளிந்த வானம் போல என்னுள் விடியல் கண்டேன் – (இயற்கை) அருள்மழையும் பொழியக் கண்டேன் கல்லும் கசிந்து உருகக் கண்டேன் நீல வானில்விடியல் போல எந்தன் உள்ளம் ஒளிரக் கண்டேன ் கரை சேர ஆசை கொண்டேன்பணிந்து விட்டேன் கறைந்து விட்டேன் உன்னில் கலந்து விட்டேன் – (இயற்கை)
No comments:
Post a Comment